கொரோனா விழிப்புணர்வுக்காக பாடகியாக மாறிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி... குவியும் பாராட்டுகள்

கொரோனா விழிப்புணர்வுக்காக பாடகியாக மாறிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி... குவியும் பாராட்டுகள்
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாரா பாத்த்திமா
  • Share this:
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் பாட்டுப்பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா தாக்கத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்று போலீசார் அவர்களுக்கு அறிவுரைகளும் கூறிவருகின்றனர்.


கர்நாடகா மாநிலம் கிழக்கு பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பாட்டுப்பாடி கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாரா பாத்த்திமா ஒலி பெருக்கி மூலம் “வீட்டுக்குள் பாதுகபாப்பாக இருங்கள். கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். கொரேனா அறிகுறி இருந்தால் முககவசம் அணிந்து கொள்ளுங்கள்“ என்ற அவர் ஆங்கில ரைம்ஸ் ஒன்றை பாடிய உற்சாகத்துடன் விழிப்புணர்வு மேற்கொண்டார்.



பெண் காவல் அதிகாரியின் வினோதமான விழிப்புணர்வு வீடியோவை பார்த்த பலர் அவருக்கு தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்