கோவிட் -19 சோதனைக்கு மறுத்த பெங்களூரு இளைஞர்.. கொடூரமாக தாக்கிய நகராட்சி ஊழியர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ

இளைஞரை தாக்கும் காட்சிகள்

பெங்களூருவில் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள மறுத்த இளைஞரை மாநகராட்சி ஊழியர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நகராட்சி ஊழியர்கள் மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கு மறுத்த இளைஞரை ஊழியர்கள் தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அந்த வீடியோவில், “ டி-ஷர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவரை இரண்டு நபர்கள் கையை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இடத்துக்கு அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் அந்த இடத்தில் டேபிள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர். இளைஞர் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள மறுப்பு தெரிவிக்க இரண்டு ஊழியர்களும் அந்த நபரை தாக்குகின்றனர்.

     இளைஞரின் கழுத்தை பிடித்து அந்த டேபிளின் மீது அழுத்துகின்றனர். அந்த இளைஞரின் கைகளை முறுக்கி சரமாரியாக தாக்குகின்றனர். இதில் அந்த நபர் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்த இளைஞரை தூக்கி மீண்டும் தாக்குதல் நடத்துகின்றனர். அந்த வழியாக சென்ற இரண்டு நபர்கள் அந்த அதிகாரிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் அங்கு அமர்ந்திருந்தவர் அந்த நபர்களை தடுக்கவோ சமாதானப்படுத்தவோ இல்லை. சாலையில் சென்ற நபர்கள் அதிகாரிகளை சமாதானம் செய்து வைத்தனர்.

  Also Read: வாகனசோதனைக்கு பயந்து பைக்கில் சீறிய இளைஞர்கள்.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர் - அதிர்ச்சி வீடியோ

  இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள நபர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். சமூகவலைத்தளத்தில் இந்த வீடியோ வெளியானதையடுத்து இதுதொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா வருத்தம் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரத்தில் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சோதனை அதிகரிக்க முயற்சித்தாலும் அதிகாரிகள் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: