கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி
கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் முகவரியைக் கண்டறிய முடியவில்லை என்று பெங்களூரு மாநகராட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: July 26, 2020, 10:38 PM IST
கர்நாடகாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சனிக்கிழமை ஒரேநாளில் 5,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 90,000 தாண்டியுள்ளது. கடந்த 3 நாட்களாகவே நாள்தோறும் 5,000க்கும் அதிகமான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது.
பெங்களூருவில் மட்டும் 43,000க்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 32,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூருவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Also read: ஜனநாயகத்தைக் காக்க மக்கள் குரலெழுப்ப வேண்டும் - ராகுல் காந்தி இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல், தற்போது வரை தொற்று உறுதி செய்யப்பட்ட 3,338 பேரின் முகவரியைக் கண்டறிய முடியவில்லை என மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார். அவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது அளித்த முகவரி தவறானது என்றும் அவர்களை தேடி வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 3,000க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுடன் கலந்துவிட்டது, தொற்றின் வேகத்தை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
பெங்களூருவில் மட்டும் 43,000க்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 32,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூருவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Also read: ஜனநாயகத்தைக் காக்க மக்கள் குரலெழுப்ப வேண்டும் - ராகுல் காந்தி