தொடரும் கொரோனா அச்சம்: ஊரடங்கால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள்..!

ஒரு மாதம் முழுவதும், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும், வாகனங்கள், தொழிற்சாலைகள் இயங்காதபோதும் கூட, 17 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது.

தொடரும் கொரோனா அச்சம்: ஊரடங்கால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள்..!
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், புவி வெப்பமயமாதலை தடுக்க இதைவிட கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதையும் கொரோனா ஊரடங்கு உணர்த்தி இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், மார்ச் மாத தொடக்கத்தில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்ததுடன், அத்தியாவசியப்பொருட்கள் தவிர்த்து அனைத்து உற்பத்திக் கூடங்களையும் மூடின. இந்நிலையில், ஊரடங்கு சுற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஏப்ரல் மாதத்தில் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் மிகப்பெரிய அளவு குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது

ஊரடங்கை கடுமையாக அமுல்படுத்திய நாடுகளில் ஏப்ரல் மாதத்தில் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 26 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. பிரிட்டனில் 31 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 28 சதவீதமும் குறைந்துள்ளது.


தினசரி கார்பன் வெளியேற்றத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக அமெரிக்காவில் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியனில் 2.1 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவில் தினசரி கார்பன் வெளியேற்றம் 1.7 சதவிதம் நிறுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில், மிகக்குறைவாக அதாவது 0.2 சதவிதம் மட்டுமே தணிந்திருக்கிறது. இவை தவிர்த்து பிற உலக நாடுகளில் 5.5 சதவீதமும், உலக அளவில் தினசரி சராசரி 13.6 சதவீதமும் குறைந்துள்ளது.

விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் அதன் மூலம் 60 சதவீதம் கார்பன் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்கள் இயங்காததால் 36 சதவிதமும், மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் இயங்காததால் 86 சதவீதம் கார்பன் வெளியேற்றமும் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையே நீடித்தாலும் உலக அளவில் இந்த ஆண்டில் கார்பன் டை ஆக்சைடு வெற்றியேற்றம் சராசரியாக 7 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஜூன் மாதத்திற்குள் அனைத்து நாடுகளும் ஊரடங்கை முழுமையாக தளர்த்தினால், கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் அதிகரித்து உலகத்தில் சராசரி 4 சதவிதமாக குறையும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.ஒரு மாதம் முழுவதும், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும், வாகனங்கள், தொழிற்சாலைகள் இயங்காதபோதும் கூட, 17 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Also see...


 
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading