• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்த பெல்ஜியம்! மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்த பெல்ஜியம்! மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றானது பெல்ஜியம்

  • Share this:
    உலகின் சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம், கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகமானதை அடுத்து மே 3 வரை ஊரடங்கை பெல்ஜியம் அரசு நீட்டித்துள்ளது.

    மேற்கு ஐரோப்பியாவில் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் தொகையுடன் உள்ள சின்ன நாடு தான் பெல்ஜியம். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி பெல்ஜியத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதன்பின்னர் வேறு தொற்று கண்டறியப்படாமலே இருக்க, மார்ச் ஒன்றாம் தேதி இரண்டாவது தொற்று உறுதியானது. படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. பெல்ஜியத்தில் கொரோனாவின் உயிரிழப்பு கணக்கு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியது.

    ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில் உயிரிழப்பு 4000ஐ எட்டியுள்ளது. இதன்மூலம் உலகில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் மாறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைகளை பெல்ஜியம் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நாளொன்றுக்கு அதிகளவாக 4000 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது பரிசோதனை எண்ணிக்கை நாளொன்றுக்கு 10,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 19ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, பாதிப்புகள் அதிகரிப்பதை அடுத்து மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்குவது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

    விதிகளை மீறுவோருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஊரடங்கால் சுமார் 600 மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என பெல்ஜியம் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    Also see...

     











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: