கொரோனாவை தடுக்க பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் - பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தடுக்க பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் - பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்
  • Share this:
தமிழக சுகாதாரதுறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், இன்று மாவட்டம் முழுவதும் கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், மருத்துவ பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவையை ஆய்வு மேற்ககொண்டு வருகிறார்.

ஒசூரில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் பீலா ராஜேஷ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாகவும், கொரோனா மையம், பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளிட்டவை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் வழிமுறைகளை பின்பற்றி தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உடனிருப்போர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.கொரோனா வழிமுறைகள் பின்பற்றாமல் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், மாநில எல்லையில் நடை பாதையாக வரும் கர்நாடகத்தவர்கள் இபாஸ் இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Also read... யாரெல்லாம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading