BJP MP Tejasvi Surya | பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு ஐசியூ படுக்கை ஒதுக்க ரூ.1 லட்சம் வரை வசூல்: 8 பேர் கைது

பெங்களூரு வார் ரூமில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.

பெங்க்களூருவில் நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் ஐசியூ படுக்கைகள் கிடைக்க ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வர இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
    கர்நாடகாவில் கொரோனா நிலவரம் நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டிருக்கிறது, மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள் கிடைப்பதற்கு அரும்பாடு பட வேண்டியுள்ளது. இந்நிலையில் நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் ஐசியூ படுக்கைகள் கிடைக்க ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வர இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூரியா கூறும்போது, “நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்யும் உதவி மையத்தை எப்போது தொடர்புகொண்டாலும் படுக்கைகள் கிடைப்பதில்லை. அதேவேளையில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவ மனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்கள். படுக்கைகள் காலியானாலும் அவைநோயாளிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்தேன்.

    அதில் நோயாளிகளின் ஆபத்தான நிலையை வைத்துரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு படுக்கை ஒதுக்கீடு செய்வது தெரிந்தது.

    உதவி மையத்தை தொடர்பு கொள்பவரிடம் பகலில் படுக்கை இல்லை எனக் கூறி, இரவு 12 மணிக்கு படுக்கை ஒதுக்கி பணம் சம்பாதித்துள்ளனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. மருத்துவமனை படுக்கை ஒதுக்கும் விவகாரத்தில் நோயாளிகளின் மரணத்துடன் விளையாடிய நபர்கள் மீது முதல்வர் எடியூரப்பா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி சூர்யா கூறினார்.

    பெங்களூருவில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி அந்த மருந்தை கள்ளச்சந்தையில் ரூ. 60 ஆயிரம் வரை விற்ற ஜனார்த்தனன், தீபக், லோகேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பாஜக எம்.பி. இதனை விசாரிக்கும் போது மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்கள் உட்பட பிற முஸ்லிம் பணியாளர்கள் யார் என்றும் இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்றும் கொரோனா காலத்த்திலும் உதவிப்பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் வேலை பார்ப்பவர்களையும் மத ரீதியாக அணுகி சிக்கல்களை ஏற்படுத்துவதாக தேஜஸ்வி சூரியா மீது புகார் எழுந்துள்ளது, நெட்டிசன்களும் தேஜஸ்வி சூரியாவை இதற்காக விளாசி தள்ளியதும் குறிப்பிடத்தக்கது.

    கர்நாடகாவில் நாளொன்றுக்கு 50,000 த்திற்கும் மேல் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் பதிவாகின்றனர். இதனையடுத்து அங்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
    Published by:Muthukumar
    First published: