Home /News /coronavirus-latest-news /

முதலீடு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாத நிலை...! வாழை விலை வீழ்ச்சியால் சீர்காழி விவசாயிகள் கவலை

முதலீடு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாத நிலை...! வாழை விலை வீழ்ச்சியால் சீர்காழி விவசாயிகள் கவலை

வாழை விவசாயம் செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் நிலையில் முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

வாழை விவசாயம் செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் நிலையில் முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

வாழை விவசாயம் செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் நிலையில் முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

சீர்காழி தாலுகாவில் ஊரடங்கு உத்தரவால் வாழை தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் காத்திருப்பு, கீழையூர், கிடாரம்கொண்டான், ராதாநல்லூர், அள்ளிவிளாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பூவம், ரஸ்தாளி,மொந்தம், கற்புறவல்லி,செவ்வாழை உள்ளிட்ட பலவகையான வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

வாழை விவசாயத்துக்க பஞ்சகாவியம், மாட்டுச்சாணம்,எள்ளுப் புண்ணாக்கு  உள்ளிட்ட இயற்கையான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் வாழைப் பழம், வாழை இலை உள்ளிட்டவைகளை சென்னை, திருச்சி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த 45 நாட்களாக விளைவிக்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் வாழை இலைகளை மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பழங்கள் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாழைத்தார் ரூ.200 முதல் 500 வரை விற்பனையாகிய நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் ஒரு வாழைத்தார் ரூ. 50 முதல் 100 வரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் வாழை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் வாழை இலை, வாழைப் பழம், வாழைமரம் பயன்படுத்துவார்கள். இப்போது திருமண நிகழ்ச்சிகள் கூட நடைபெறாததால் வாழைத்தார் மற்றும் இலை தேங்கி கிடக்கின்றன. நாகை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் அதிகப்படியாக செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வாழை விவசாயம் செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் நிலையில் முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் வாழை விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாழை விவசாயத்திற்கு இப்பகுதியில் வாழை கிடங்கு மற்றும் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Lockdown

அடுத்த செய்தி