• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 70,000 லிட்டர் கிருமி நாசினி தயாரிக்கிறது பிரபல ’பக்கார்டி’ மது நிறுவனம்!

70,000 லிட்டர் கிருமி நாசினி தயாரிக்கிறது பிரபல ’பக்கார்டி’ மது நிறுவனம்!

சானிடைஸர் என்பது தண்ணீரும் , சோப்பும் இல்லாத, பயன்படுத்த முடியாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. எனவே சானிடைஸரைக் காட்டிலும் சோப்பு போட்டுக் கைக்கழுவதுதான் சிறந்த வழி என்கின்றனர்.

சானிடைஸர் என்பது தண்ணீரும் , சோப்பும் இல்லாத, பயன்படுத்த முடியாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. எனவே சானிடைஸரைக் காட்டிலும் சோப்பு போட்டுக் கைக்கழுவதுதான் சிறந்த வழி என்கின்றனர்.

  • Share this:
    இந்தியாவில் அரசு மருத்துவமனைகளுக்கு 70 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தயாரித்து வழங்க உள்ளதாக மதுபான தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி அறிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கிருமி நாசினி தட்டுப்பாட்டை போக்குவதற்காக உலக நாடுகளுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கிருமி நாசினியை வழங்க உள்ளதாக பக்கார்டி நிறுவனம் தெரிவித்திருந்தது.

    இதன்படி, இந்தியாவில் முதல் கட்டமாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனது மது தயாரிப்பு ஆலையில் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் உள்ள தனக்கு சொந்தமான ஆலைகள் மூலம் 70 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினியை தயாரித்து அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க உள்ளதாக பக்கார்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

    மது தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு, மது தயாரிக்கக் கையிருப்பில் வைத்துள்ள ஆல்கஹாலைக் கொண்டுருமி நாசினி தயாரித்து அளிப்பதென அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...

     














    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: