• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தடுப்பு பணிக்காக அரசுக்கு ₹1125 கோடி நன்கொடை அளித்தார் விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி

கொரோனா தடுப்பு பணிக்காக அரசுக்கு ₹1125 கோடி நன்கொடை அளித்தார் விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி

விப்ரோ

விப்ரோ

  • Share this:
    கொரோனா தடுப்பு பணிக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் 1 125 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸால் 38 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    அதனையேற்று ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் நிதியுதவி அளித்தனர். அது மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில் விப்ரோ நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் 1, 125 கோடி ரூபாய் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளது.

    இதற்கிடையே, மக்கள் அனைவரும் பிரதமரின் இந்த நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமிதஷாவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: