பொது இடங்களில் கூட்டம் கூட வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்த அதே நாளில் ஃப்ளோரிடா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,503 பேர் இறந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பொது இடங்களில் கூட வேண்டாம் என அதிபர் டிரம்ப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஞாயிற்றுக் கிழமையன்று ஃப்ளோரிடா கடற்கரையில் குவிந்த மாணவர்கள் உற்சாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் கடற்கரையில் கூடிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளது.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.