ஊரடங்கு காரணமாக விலை சரிந்த அவக்கோடா பழங்கள்: வேதனையில் விவசாயிகள்!

அவக்கோடா பழங்கள்

அவக்கோடா பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் மலைப்பகுதியில் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • Share this:
    ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் விளையும்  அவக்கோடா பழங்களின் விலை சரிந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.  

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட் பழங்களை ஆண்டுதோறும்  உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அடுக்கம், பெருமாள்மலை, வடகவுஞ்சி, பேத்துப்பாறை, பண்ணைக்காடு, பூலத்தூர் கும்பரையூர், உள்ளிட்ட  பல்வேறு மலைக்கிராம பகுதிகளில் அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட் பழங்கள் ஏராளமான அளவில் விளைகின்றன.

    அவக்கோடா பழங்கள்


    அதிக அளவு அவக்கோடா (பட்டர் ப்ரூட்) பழ மரங்களை நடவு செய்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்த பழங்கள் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுவதாலும் இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோப்பு , முகப்பொழிவு பெருவதற்கான கீரீம்கள் தயாரிக்கப்படுவதாலும் தமிழ்நாடு மட்டுமின்றி கோவா ,கர்நாடக ,கேரளா , மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இதற்கு வரவேற்பு அதிகம் உள்ளது.

    இந்தப் பழங்களில் பல வைட்டமின் சத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கால்சியமும் அதிக அளவில் உள்ளது. எந்த பழத்திலும் இல்லாத அளவிற்கு இதில் நல்ல கொழுப்பும் உள்ளது. இதை வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதுடன் ஒரு நாளில் ஒரு நேர உணவாகவும் அதை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    அவக்கோடா பழங்கள்


    இந்தியாவில் இந்த பழத்தின் பலன்கள் தெரியாததின் காரணமாக பலரும் இதனை  உண்பதில்லை, தற்போது கொரோனா நோய் அதிக அளவில் பரவியுள்ள நிலையில் வெளிநாடுகளில் உள்ள பொதுமக்கள் அதிக அளவில் இந்த பழங்களை வாங்கி உண்பதாகவும் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மலைப்பகுதியில் விளையும் பட்டர் ஃப்ரூட் பழங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. ஆனால் உள் நாடுகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை கோவா, பெங்களூர்  உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு  வரும் வெளிநாட்டினர் இதனை மிகவும் விரும்பி உண்ணுகின்றனர்.

    அமெரிக்கா போன்ற பல்வேறு வெளிநாடுகளிலும் அதிக அளவில் உணவாக பயன்படுத்தப்படுகிறது எனவே தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து இந்த பழத்தின் பயன்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மூலம் அதனை கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    அவக்கோடா பழங்கள்


    மேலும் இதுகுறித்து டாக்டர் முத்து வேந்தன் கூறுகையில், பட்டர் புரூட் பழமானது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான அளவில் விளைகின்றது. இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு இந்த பழம் நல்ல பலனளிக்கும். இதில் பல வைட்டமின் சக்திகள் உள்ளதுடன் வேறு எந்த பழத்திலும் இல்லாத வகையில் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

    எனவே பொதுமக்கள் ஆண்டுதோறும் இதனை உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம் உடல் எடை குறைவுக்கும் இப்பழத்தை பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது அவக்கோடா பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் மலைப்பகுதியில் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    href="https://www.youtube.com/News18TamilNadu">YouTube
    Published by:Vaijayanthi S
    First published: