கொரோனா பாதித்துள்ளதாக நினைத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தம்பதி தீக்குளித்து தற்கொலை...!

சதீஷ்க்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து டயாலிசிஸ் மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

கொரோனா பாதித்துள்ளதாக நினைத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தம்பதி தீக்குளித்து தற்கொலை...!
தீ - கோப்புப் படம்
  • Share this:
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர், அவருடைய மனைவி ஆகியோர் தங்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருக்கும் பிரகாஷ் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ், வெங்கட லட்சுமி. சதீஷ் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில், குழந்தைகள் இல்லாத இரண்டு பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே பிழைப்பு நடத்தி வந்தனர்.

சதீஷ்க்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து டயாலிசிஸ் மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் சதீஷ் மற்றும் வெங்க்ட லட்சுமி ஆகிய இருவரும் இன்று காலை வீட்டிற்கு வெளியே உள்ள காலி இடத்தில், தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.


அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தங்களுக்கு கொரானா ஏற்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டது. எனவே வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see...



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading