ஜி20 நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்க மோடி முயற்சி - ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

ஜி20 நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்க மோடி முயற்சி - ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு
பிரதமர் மோடி
  • Share this:
கொரோனா பாதிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் முயற்சியை ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுகுறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு சார்க் நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார். அதனையேற்று, இன்று சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சந்திப்பில், பிரதமர் மோடி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்டார்.


இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக ஜி20 நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்க பிரதமர் மோடி முயற்சிப்பது பாராட்டத்தக்கது என ஆஸ்திரேலிய பிரதமர் மாரீசன் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஜி20 நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைக்க பிரதமர் மோடி முயற்சித்து வருவதாகவும், இது பாராட்டத்தக்க நடவடிக்கை என்றும், ஆஸ்திரேலியா இந்த முயற்சியை ஆதரிக்கும் என்றும் ஸ்காட் மாரீசன் கூறியுள்ளார்.

Also see:
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading