கொரோனா அச்சுறுத்தலால் விலங்குகளுக்கு உணவிட நிதி திரட்டிய நபர் கைது!
கொரோனா அச்சுறுத்தலால் விலங்குகளுக்கு உணவிட நிதி திரட்டிய நபர் கைது!
விலங்குகளுக்கு உணவிட நிதி திரட்டிய நபர் கைது
கொரோனா அச்சுறுத்தலால் புக்கெட் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா கைவிடப்பட்டுள்ளதாக தகவல் பதிவிட்ட நின் குயென் என்னும் ஆஸ்திரேலியர் அங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்காக 34 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.
தாய்லாந்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவிடுவதாகக்கூறி இணையத்தில் நிதி திரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா அச்சுறுத்தலால் புக்கெட் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா கைவிடப்பட்டுள்ளதாக தகவல் பதிவிட்ட நின் குயென் என்னும் ஆஸ்திரேலியர் அங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்காக 34 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.
இது குறித்த புகைப்படங்களை கண்ட உயிரியல் பூங்காவின் உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து குயென் மற்றும் ஒரு அமெரிக்கப் பெண்மணி உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
விலங்குகளுக்கு உணவிடவே தாங்கள் இவ்வாறு செய்ததாக குயென் கூறியதை அடுத்து உயிரியல் பூங்காவிற்கு சென்று பார்த்த போலீசார் அங்கு விலங்குகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.