• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Australia Delta Corona | ஆஸ்திரேலியாவிலும் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிப்பு

Australia Delta Corona | ஆஸ்திரேலியாவிலும் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிப்பு

Youtube Video

உலகளவில் கொரோனா பாதிப்பு 17 கோடியை தாண்டியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும் டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் 17 கோடி 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்றில் இருந்து 15 கோடி 60 லட்சம் மீண்டுவந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் , துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. சீனாவிலும் புதிய பாதிப்புகள் பதிவாகிவரும் சூழலில், தடுப்பூசி பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய சினொவேக் மருந்து நிறுவன தலைமைச் செயல் அதிகாரி யின் வெய்டோங் (Yin Weidong), இம்மாத இறுதிக்குள் சீனாவின் 40 சதவீத மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று கூறினார்.

    ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் குலாம் நசாரி, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

    சிலி நாட்டில் வேகமாக பரவும் தொற்றால், மருத்துவமனை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் குறைந்த அளவிலேயே பணியாற்றுவதால் அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பே சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதனிடையே அர்ஜென்டினா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே ஸ்புட்னிக் -வி தடுப்பூசி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வரவிருப்பதாக அரெஜ்ன்டினா அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.

    அதேபோல செர்பியா நாட்டில், ஸ்புட்னிக் தடுப்பூசியின் உள்நாட்டு தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பத்து நாட்களுக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



    இதனிடையே இந்தியா மற்றும் இங்கிலாந்தில் பரவியுள்ள டெல்டா வகை கொரோனா வைரஸ், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் டெல்டா வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் படிக்க... Coronavirus Siddha Centre | சித்த மருத்துவ சிகிச்சையின் சிறப்பம்சம் என்ன?

    இந்தநிலையில் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம், உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 சதவீத தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கே சென்றடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சுமார் பூஜ்யம் புள்ளி 5 சதவீத தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: