இந்தியாவுடனான விமான சேவை ரத்து - ஆஸ்திரேலிய அரசு முடிவு

விமான சேவை

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மே 15ந் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து என ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதனிடையே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, 3.23 லட்சமாக குறைந்தது. தினசரி பாதிப்பு குறைந்து இருந்தாலும், தொடர்ந்து 6வது நாளாக இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  நாடு முழுவதும் 16 லட்சத்து 58 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

  அதேசமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2,771 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 28 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 14 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது.

  முன்னதாக இந்தியாவில் கொரோனா பரவல் மனதை உலுக்கும் நிலையை காட்டிலும் மோசமானதாக இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு, கூடுதல் ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார்.

  ALSO READ : கொரோனா பரவலையடுத்து பணக்கார இந்தியர்கள் தனி விமானத்தில் வெளிநாடு பயணம்

  ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் கான்சண்டிரேட்டர் கருவிகள், நகரும் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வக உபகரணங்களும் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிற்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய, உலக சுகாதார அமைப்பு தயாராக இருப்பதாக டெட்ராஸ் தெரிவித்தார்.

  இந்நிலையில் சமூக ஊடகங்களில் கொரோனா மருத்துவமனைகளில் இடமின்மை செய்திகளும் மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டு செய்திகளும் வந்தவண்ணம் இருப்பதால், இந்தியாவில் வாழும் பணக்கார குடும்பங்கள் சில வெளிநாடுகளுக்கு தனி விமானத்தில் பயணித்துள்ளனர்.

  Australia will suspend all direct passenger flights from India until May 15, says PM Scott Morrison. #COVID19 pic.twitter.com/sev4Ym5rNk  புதுடெல்லியைச் சேர்ந்த கிளப் ஒன் ஏர் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜன் மெஹ்ரா கூறும்போது, “பணக்காரர்கள் என்று இல்லை, யாருக்கெல்லாம் தனியார் ஜெட் எடுத்துக் கொள்ள வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் தனியார் ஜெட்களில் பறக்கின்றனர்” என்றார். இதனிடையே தற்போது மே 15ந் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: