கொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்

கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகாமில் பெண் ஒருவரை ஆடைகளைக் கிழித்து குடி போதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த காவலர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: May 25, 2020, 8:21 AM IST
  • Share this:
உத்தரகாண்ட மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கிச்ஹா என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மது அருந்தியுள்ளனர்.

இதனை அடுத்து, அதில் ஒரு காவலர் முகாமுக்குள் சென்று அங்கு தனியாக இருந்த அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் சில்மிஷம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, அந்தப் பெண் அவரை தள்ளி விட்டு தப்ப முயற்சிக்கையில், ஆடைகளைக் கிழித்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார் காவலர்.

இது தொடர்பாக அந்தப் பெண், செல்போன் மூலம் தனது வீட்டாருக்கு தகவல் அளிக்கவே, உடனடியாக மாவட்ட எஸ்.பிக்கு புகார் சென்றது. ஊடகங்களில் இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், உடனடியாக அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.


விசாரணையில் காவலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது உறுதியான நிலையில், அவர் காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்து மது அருந்திய அனைத்து காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.


First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading