ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 366 ஆக உயர்வு..!- திணறும் இத்தாலி

இத்தாலிக்குள் நுழையவும் இத்தாலியிலிருந்து வெளியேறவும் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 366 ஆக உயர்வு..!- திணறும் இத்தாலி
கொரோனா
  • News18
  • Last Updated: March 9, 2020, 1:29 PM IST
  • Share this:
கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியில் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 366 கொரோனா மரணங்கள் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை இத்தாலியிலேயே அதிகமாக உள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,492-ல் இருந்து 7,375 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பலியானோரின் எண்ணிக்கையும் 133-ல் இருந்து 366 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், இத்தாலிக்குள் நுழையவும் இத்தாலியிலிருந்து வெளியேறவும் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கைகளை இத்தாலி மிக விரைவாக மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் இத்தாலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.


அந்நாட்டில் உள்ள அத்தனை பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. திரை அரங்குகள், வணிகக் கட்டடங்கள், அருங்காட்சியகங்கள் என அத்தனையும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க: Coronavirus Outbreak LIVE Updates: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு... தமிழக நிலை கட்டுக்குள் உள்ளது


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading