பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..

கோவிட் -19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானமாக அளிப்பவர்கள் எதிர்காலத்தில் வேலை நேர்காணல்கள் மற்றும் அரசாங்க வசதிகளில் முன்னுரிமை பெறலாம் என்று அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
பிளாஸ்மா தெரபி
  • Share this:
கோவிட் -19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானமாக அளிப்பவர்கள் எதிர்காலத்தில் வேலை நேர்காணல்கள் மற்றும் அரசாங்க வசதிகளில் முன்னுரிமை பெறலாம் என்று அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மாவை தானமாக தருமாறு, கோவிட் -19-இல் இருந்து மீண்ட மக்களிடம் முறையிட்ட ஷர்மா, ”அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ஒரு நோயாளியின் மிதமான தொற்று நிலையில் பிளாஸ்மா கொடுக்க முடியுமானால் 90% நோயாளிகள் குணமடைவதாகவும்” கூறினார்.

“பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கும். எதிர்காலத்தில் நேர்காணல்கள், அரசாங்க திட்டங்கள் போன்றவற்றில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நாங்கள் கருத்தில் கொள்வோம். ஒரு நேர்காணலில் இரண்டு நபர்களுக்கு சம மதிப்பெண்கள் கிடைத்தன என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் பிளாஸ்மா நன்கொடையாளராக இருந்தால், இரண்டு கூடுதல் மதிப்பெண்கள் அவரது எண்ணிக்கையில் சேர்க்கப்படும். இதேபோல், ஒரு பிளாஸ்மா நன்கொடையாளர், PMAY இன் பயனாளியாக இருக்கிறார், ஆனால் அவரது பெயர் பட்டியலில் இல்லை, நாங்கள் அவரது பெயரை எடுத்துக்கொள்வோம்” என்று சர்மா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க:-

கெளதம் மேனன் குரலில் Discovery Plus-இன் Covid-19 ஆவணப்படம்.. யாருடைய பேட்டிகள்? என்னென்ன விளக்கங்கள்?

"பிளாஸ்மா தானத்தை பொறுத்த வரையில், ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம். கோவிட் -19-இல் இருந்து மீண்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டு மனிதகுலத்தை காப்பாற்ற முடியும். பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் பிளாஸ்மா வங்கி இல்லை. அசாமு மாநிலத்துக்கு வெளியிலும் பிரச்சாரம் செய்து, மக்கள் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்வோம், ”என்று அமைச்சர் கூறினார்.அசாமுக்கு வெளியில் இருந்து பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளவர்களுக்கு "மாநில விருந்தினர் வசதிகள்" வழங்கப்படும் என்றும், அஸ்ஸாம் அரசாங்கம் அவர்களின் விமான பயண செலவுகளை இரு வழிகளிலும் ஏற்கும். மக்கள் முன்வருவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது” என்று அமைச்சர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading