கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: அவரது மனைவியின் உருக்கமான பதிவு!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: அவரது மனைவியின் உருக்கமான பதிவு!

கொரோனா தொற்றால் தங்கள் குடும்பத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றால் தங்கள் குடும்பத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

  • Share this:
    கொரோனா தொற்றால் தங்கள் குடும்பத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீர்ர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.  கொரோனா அச்சம் காரணமாக ஒரு சில திரைப்பிரபலங்கள் தங்களின் திரைப்பட படப்பிடிப்பை ஒத்திவைத்துள்ளனர். இதேபோல், விளையாட்டு வீரர்களில் சிலர் போட்டிகளில் பங்கேற்பதை விட்டு விட்டு தங்களது குடும்பத்தினருடன்  வீட்டிலேயே ஓய்வில்  உள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல  சுழற்பந்து வீச்சாளரும்  ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    கொரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்,  வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தினர் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்தக் கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்  என்று அஸ்வின் விளக்கமளித்தார்.

    இந்நிலையில்,  அஸ்வினின் குடும்பத்தில்  10க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே வாரத்தில் தனது குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் மூலம் தொற்று பரவியதாகவும் தெரிவித்துள்ளார்.

     



    அனைவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மருத்துவமனைகளில்  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர் என்றும் மிகவும் மோசமான வாரம் இது என்றும் பிரீத்தி கூறியுள்ளார்.

    தொற்றால் பாதிக்கப்பட்ட  பெற்றோர் மூவரில் ஒருவர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள அவர்,    ‘தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே  இந்த தொற்றுக்கு எதிராக  போராட ஒரு வழி. உடல் வலிமையைவிட மன வலிமை மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை மீட்கும். 5லிருந்து 8 நாட்கள் மிகக் கடினமானதாக இருந்தது’ என்றும்  தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் பக்கத்தில், தன் பெயரை நீக்கி முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் பிரீத்தி மாற்றியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: