• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடுப்பூசி செலுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

தடுப்பூசி செலுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
    ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களாக கருதி தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு நாட்டின் ஏராளமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

    அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதிலும் இதுவரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளிலிருந்து மக்களுக்கு செய்தி தருகிறார்கள். அவர்களை முன்கள பணியாளர்களாக கருதவேண்டும்.

    முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

    Must Read :  போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

     

    அலட்சியம் இன்றி அனைத்து தரப்பினரும் கொரோனா தப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசும், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: