டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று? நாளை பரிசோதிக்க உள்ளதாகத் தகவல்..

காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று? நாளை பரிசோதிக்க உள்ளதாகத் தகவல்..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
  • Share this:
காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிலிருந்து அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், காய்ச்சலும் தொண்டை வலியும் இருப்பதால் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வதாக இருந்த சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு நாளை பரிசோதனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading