இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வட அமெரிக்க பயணத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உலகமே விழி பிதுங்கி நிற்கிறது. இந்தக் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலியை அடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-ம் இடத்தில் உள்ளது அமெரிக்கா. உலகின் பல நாடுகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை முடக்கியுள்ளன. இந்தியாவில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மீறி வெளியில் சுற்றினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் தனது வட அமெரிக்க பயணத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “என்னுடைய இசையை உலகம் முழுவதுமுள்ள என்னுடைய உண்மையான ரசிகர்களுக்கு தருவதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமானது கிடையாது. எதிர்பாராதவிதமாக, இது நாம் நம்முடைய குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கவேண்டிய தருணம்.
அதனால், என்னுடைய மே மற்றும் ஜூன் மாதத்துக்கான வட அமெரிக்க சுற்றுப் பயணத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கிறேன். அந்த நேரத்தில் நாம் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒருமுறை நம்முடைய இசையை பகிர்ந்துகொள்வோம். வரும் காலங்களில் இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடுவேன். எல்லோருடைய உடல்நலத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் நான் வேண்டிக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
I am postponing the May & June North American tour until next year. At that time we can come together to once again share our music and community. I will be sure to update you over time, and I am praying for everyone’s health and safety. #ARRLive#NorthAmericaTour2020 (2/2)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.