சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?

தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொரோனா உறுதியான சுமார் 300 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 15, 2020, 7:04 AM IST
  • Share this:
சென்னையில் கொரோனா நோயாளிகள் சுமார் 300 பேர் எங்கு இருக்கிறார்கள் என சென்னை மாநகராட்சி தேடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை எடுத்து பாசிடிவ் ஆனவர்கள். பரிசோதனை எடுக்கும் போது தவறான தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை கொடுத்திருப்பதால் அவர்களை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.

சென்னையில் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30,444. இவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை 13,742. குணமடைந்தோர் 15,765 மற்றும் இறந்தவர்கள் 314 ஆகும். 30444 பேரில் மீதமுள்ள 623 பேர் மற்ற மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி கூறுகிறது.

இதில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் சுமார் 300 பேர் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல்கள் சென்னை மாநகராட்சியிடம்  இல்லை.


தமிழ்நாட்டில் 34 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இதில் 18 சென்னையில் உள்ளன. தனியார் ஆய்வகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டுடன் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வகங்களுக்கு வருபவர்களின் தொடர்பு எண், முகவரி ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த விவரங்கள் தவறாக இருப்பதால் அவர்களை கண்டறிய முடியவில்லை என தெரியவந்துள்ளது. தனியார் ஆய்வகங்களுடன் நடத்திய கூட்டத்தில் இது தெரிய வந்துள்ளது.

மேலும் சில ஆய்வகங்கள் விவரங்களை சேகரிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே இனிமேல் ஆதார் அட்டை விவரங்களுடன் ஆய்வகங்கள் விவரங்களை சேகரித்து அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சி தரும் தகவல்களும் சுகாதாரத்துறை தரும் தகவல்களும் ஒத்துப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜூன் 13-ம் தேதி வரை சென்னையில் 14,180 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை கூறுகிறது. ஆனால்
13,742 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறுகிறது. மற்றவர்கள் வேறு மாவட்ட கணக்கில் சேர்க்க்ப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறினாலும் சுகாதாரத்துறை அதனை சேர்க்கவில்லை என தெரிகிறது.

மேலும் நேற்றுமுன்தினம் உயிரிழந்த 30 பேரில் 7 பேர் ஜூன் 8-ம் தேதிக்கும் முன் உயிரிழந்தவர்கள் ஆவர். ஜூன் 8-ம் தேதி வரை சென்னையில் ஏற்பட்ட 200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ கணக்கில் அவ்வபோது சேர்க்கப்படவில்லை. 76 வயது ஆண், 73 வயது ஆண், 69 வயது ஆண், 27 வயது பெண், 79 வயது பெண், 77வயது ஆண், 74 வயது ஆண் ஆகியோரின் இறப்புகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.

Also See: கொரோனா: உயிரிழப்பை தடுப்பது எப்படி? ஆபத்தை உணர்த்தும் 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கருவி
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading