டெல்லி: ஒரே மாதத்தில் 1,589 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது என பெரும் மூச்சு விடுவதற்குள் மூன்றாம் அலை குறித்து மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடத் தொடங்கிவிட்டனர்.

இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது என பெரும் மூச்சு விடுவதற்குள் மூன்றாம் அலை குறித்து மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடத் தொடங்கிவிட்டனர்.

  • Share this:
டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 வயதிற்குட்பட்ட 1,589 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்குகளால் மே மாதத்தில் பெரும் உச்சம் தொட்ட இரண்டாம் அலை, தற்போது ஜூன் மாதத்தில் குறையத் தொடங்கிவிட்டது. இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது என பெரும் மூச்சு விடுவதற்குள் மூன்றாம் அலை குறித்து மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடத் தொடங்கிவிட்டனர். மேலும், இந்த மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் குறிவைக்கும் எனவும், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெல்லியில் 14 வயதிற்குட்பட்ட 1,589 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானோர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 - 60 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6,782 பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது மொத்த பாதிப்பில் 17 சதவீதம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, மூன்றாம் அலை தொடங்குவதற்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த மாநில அரசுகள் மும்முரம் காட்டி வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை வர வாய்ப்புள்ளதால், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள்நல மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியூ படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற உலக நாடுகளில் ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோரை கண்காணிக்க விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Archana R
First published: