’ஆரோக்ய சேது’ ஆப்பை பார்த்தபின் அலுவலகம் வாருங்கள் - மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

ப்ளூ டூத், இருப்பிடம் ஆகியவற்றின் மூலம் இயங்கி ஒருவா் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு அருகிலிருக்கும் பகுதிக்கோ சென்றிருந்தால் அதை பதிவு செய்து கணக்கிட்டுக் கொண்டிருக்கும்.

ப்ளூ டூத், இருப்பிடம் ஆகியவற்றின் மூலம் இயங்கி ஒருவா் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு அருகிலிருக்கும் பகுதிக்கோ சென்றிருந்தால் அதை பதிவு செய்து கணக்கிட்டுக் கொண்டிருக்கும்.

 • Share this:
  மத்திய அரசு ஊழியா்கள் உடனடியாக ஆரோக்ய சேது மொபைல் ஆப்பை ஸ்மாா்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த செயலி பாதுகாப்பானது என்று காட்டியபின் ஊழியா்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

  மத்திய அரசு ஊழியா்கள் செயலி மூலம் தங்களை மதிப்பாய்வு செய்துகொள்ள வேண்டும் என்றும் செயலி பாதுகாப்பானது அல்லது குறைந்தபட்ச இடா்பாடு- low risk, என்று நிலையைக் காட்டும் பட்சத்திலேயே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் நோய்த்தொற்றை அறிந்து கொள்ளுவதற்கும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது 'ஆரோக்ய சேது' செயலி. ஸ்மார்ட்ஃபோனில் இயங்கும் வகையான இந்த ஆரோக்ய சேது ஆப் ப்ளூ டூத், இருப்பிடம் ஆகியவற்றின் மூலம் இயங்கி ஒருவா் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு அருகிலிருக்கும் பகுதிக்கோ சென்றிருந்தால் அதை பதிவு செய்து கணக்கிட்டுக் கொண்டிருக்கும். இப்படி கணக்கிடப்பட்ட அடிப்படையில் இந்த ஆப் அவரது நிலையைக் காட்டும்.

  நடுத்தர ரீதியிலான ஆபத்து அல்லது அதிக ஆபத்து இருப்பதாக காட்டினால் அப்படிப்பட்ட ஆண் / பெண் அரசு ஊழியா்கள் அலுவலகத்திற்கு கண்டிப்பாக வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தால் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும் என பணியாளா் நலத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலா் ஜி. ஜெயந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

  மத்திய அரசுத் துறைகளில் உள்ள மூத்த அதிகாரியோ, நிா்வாகப்பிரிவுக்கான இணைச் செயலரோ இந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்வாா் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   
  Published by:Gunavathy
  First published: