வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா? - நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்...

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா? - நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்...
கோப்புப்படம்
  • Share this:
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் எனவும், வெளியே வரக்கூடாது, வந்தால் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது.

வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருப்பவர்கள் தங்களை பராமரித்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் சென்னை மாநகராட்சி விளக்கியுள்ளது.

• தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அதிக தண்ணீரும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.


• நோயாளி உடன் ஒரே அறையில் இருப்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும், பயன்படுத்திய முக கவசங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

• நோயாளிக்கென தனி பாத்திரம், துணி, படுக்கை விரிப்பை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர் சோப்பு தண்ணீரால் சுத்தமாக கழுவ வேண்டும்.

• அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கைகளை 20 விநாடிகள் சுத்தப்படுத்த வேண்டும்.• உணவு சமைப்பதற்கு முன், சமைக்கும் போது, சமைத்த பின், சாப்பிடும் முன், கழிவறையை பயன்படுத்தும் முன், பயன்படுத்திய பின் கண்டிப்பாக கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

• நோயாளி அதிகம் தொடும் இடங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

• நோயாளிக்கு மூச்சு திணறல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவிகளை அணுக வேண்டும்.

மேலும் படிக்க...

மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading