முகப்பு /செய்தி /கொரோனா / Corona Vaccine| 12-18 வயதுடையோருக்கான கொரோனா தடுப்பூசி: ஜைடஸ் கெடிலா வாக்சினுக்கு விரைவில் அனுமதி - ஆகஸ்டில் சப்ளை

Corona Vaccine| 12-18 வயதுடையோருக்கான கொரோனா தடுப்பூசி: ஜைடஸ் கெடிலா வாக்சினுக்கு விரைவில் அனுமதி - ஆகஸ்டில் சப்ளை

ஜைடஸ் கெடிலா வாக்சின்.

ஜைடஸ் கெடிலா வாக்சின்.

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளது.

  • Last Updated :

இந்த கொரோனா தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் வயது வந்தோருக்கும் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை தரவுகள் தடுப்பூசி செலுத்த சாதகமாக அமைந்தால் இன்னும் சில நாட்களில் ஜைடஸ் கெடிலா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ZyCov-D என்ற இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டால் கொரோனா வைரசுக்கு எதிராக அனுமதி வழங்கப்படும் 5வது தடுப்பூசியாகும் இது.

இது தொடர்பாக கெடிலா நிறுவனம் அளிக்கும் சோதனை முடிவுகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஒழுங்கமைப்பின் நிபுணர் குழு ஆய்வு செய்யும். அனுமதி வழங்கப்பட்டால் வாக்சின் சப்ளை ஆகஸ்ட்-செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரி கூறும்போது, “கெடிலா நிறுவனம் அனுமதிக்காக மேற்கொண்ட விண்ணப்பம் மதிப்பாய்வில் உள்ளது. பிறகு இது நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டு அவர்கள் இறுதி மதிப்பாய்வு செய்து அனுமதி அளிப்பார்கள், நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாக்சின் பற்றி பேசுவார்கள்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக கோவிட்10 பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா 12-18 வயதுடையோருக்கான ஜைடஸ் கெடிலா கொரோனா வாக்சின் செப்டம்பர்வாக்கில் கிடைக்கும் என்று கூறியிருந்தார். நிச்சயம் இது பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

இது தொடர்பாக ஜைடஸ் கெடிலா கூறும்போது மாதமொன்றிற்கு 1 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யவிருக்கிறோம் என்று கூறியுள்ளது. போகப்போக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் கூறுகிறது ஜைடஸ் கெடிலா.

ZyCov-D என்பது 3 டோஸ்கள் கொண்ட தடுப்பூசியாகும். இது பார்மாஜெட் என்ற ஊசி அல்லாத முறையில் செலுத்தப்படும் தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி மருந்தை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்துப் பரமாரிக்கப்பட வேண்டியதாகும், ஆனால் 25 டிகிரி செல்சியஸிலும் கூட அது 3 மாதங்கள் காலத்துக்கு ஸ்திரமுடையதாக உள்ளது.

top videos

    இந்த வாக்சின் மட்டுமல்லாது, பாரத் பயோடெக் தனது கோவாக்சின் தடுப்பூசியையும் இதே வயதுடைய குழந்தைப் பிரிவினருக்கு சோதனை செய்து வருகிறது.

    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine