• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவை கட்டுப்படுத்த கூகுள், ஆப்பிள் இணைந்து புது முயற்சி

கொரோனாவை கட்டுப்படுத்த கூகுள், ஆப்பிள் இணைந்து புது முயற்சி

இந்த செயலி மூலமாக வைரஸ் பரவலை தடுக்க சுகாதார நிறுவனங்களுக்கு உதவ முடியும்.

  • Share this:
    ஆப்பிள் மற்றும் கூகுள் இணைந்து கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தடம் அறியும் வகையிலான ஒரு செயலியை உருவாக்க, ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதற்காக ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி வருவதாகவும், நம் அருகாமையில் யாரேனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் சென்று வந்த இடங்கள் குறித்து நமக்கு எச்சரிக்கை அனுப்பும் வகையிலான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இதில் தனிநபர் சுதந்திரம் பாதிக்காத வகையில் கண்காணிக்கப்படும் என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இதன் மூலம் அரசுகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வைரஸ் பரவலை தடுக்க உதவ முடியும் என்று நம்புவதாகவும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.



    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: