திருப்பத்தூரில் முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த அப்போலோ மருந்தகத்திற்கு ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சீல் வைத்தார்.
கொரோனா அச்சம் காரணமாக மருந்தகங்களில் முகக்கவசம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்ட திருப்பத்தூரில் செயல்படும் அப்போலோ மருந்தகம் 5 ரூபாய் மாஸ்கை 30 ரூபாய் வரையிலும், 30 ரூபாய் மாஸ்கை 70 ரூபாய்க்கும், 50 ரூபாய் மாஸ்கை 100 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.