அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - மருத்துவர்கள், ஊழியர்களை தாக்கிய உறவினர்கள்

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - மருத்துவர்கள், ஊழியர்களை தாக்கிய உறவினர்கள்

அப்பல்லோ மருத்துவமனை

கொரோனா தொற்று காலத்தில் இடைவிடாது சேவையாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு எதிராக நோயாளியின் குடும்பத்தினர் நடந்துக்கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்ததையடுத்து மருத்துவர்களை அப்பெண்ணின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் நடந்தது.

    டெல்லி அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை 8 மணிக்கு போர்க்களம் போல் காட்சியளித்தது. ஒரு கூட்டம் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்துள்ளனர். முதற்கட்ட தகவலில் 67 வயதுமதிக்கத்த ஒரு பெண்ணை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதித்துள்ளனர்.

    ஐசியூவில் இடம் இல்லாததால் அந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களை தாக்கியுள்ளனர். மருத்துவமனையை சேதப்படுத்தியுள்ளனர். ஒருவர் பெரிய கட்டையை எடுத்து வந்து காவலாளி, மருத்துவர்களை தாக்கினார். இதில் மருத்துவமனை வாட்ச்மேன், மருத்துவர்களுக்கு ரத்தம் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை வராண்டா முழுவதும் ரத்தமாக இருந்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்துக்கு பின்னர்தான் காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்தடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்று காலை மிகவும் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. அவரை படுக்கை வசதியுடைய மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அவரது உறவினர்களிடம் தெரிவித்தோம். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு ஆக்சிஜன் வழங்கினோம். எதிர்பாராதவிதமாக காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை சொத்துக்களையும் அழித்தனர். எங்களது மருத்துவர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம். அந்தப்பெண்ணின் மரணத்துக்கு மருத்துவமனை தரப்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இந்த கொரோனா தொற்று காலத்தில் இடைவிடாது சேவையாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு எதிராக நோயாளியின் குடும்பத்தினர் நடந்துக்கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: