• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஆந்திராவில் மதுபாட்டில்கள் விலையை 75% உயர்த்திய அரசு... அசராமல் வாங்கிச்செல்லும் குடிமகன்கள்...!

ஆந்திராவில் மதுபாட்டில்கள் விலையை 75% உயர்த்திய அரசு... அசராமல் வாங்கிச்செல்லும் குடிமகன்கள்...!

மது வாங்க வரிசையில் நிற்பவர்கள்

மது வாங்க வரிசையில் நிற்பவர்கள்

விலையை உயர்த்துவது கூட்டத்தை கட்டுப்படுத்தும் என்று அரசு கருதிய நிலையில், குடிமகன்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச்செல்கின்றனர்

  • Share this:
    ஆந்திராவில் மதுபானங்களின் விலையை 50 முதல் 75 விழுக்காடு வரை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    40 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்ட்டுள்ளதால், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மதுபானங்களின் விலையை 25 விழுக்காடு வரை ஆந்திர மாநில அரசு நேற்று உயர்த்தியது.

    எனினும், நீண்ட வரிசையில் நின்று விலையை பொருட்படுத்தாமல் குடிமகன்கள், மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். இந்த நிலையில், இன்று கூடுதலாக 50 சதவிகிதம் விலையை அரசு உயர்த்தியது.

    புதிய விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ள ஆந்திர மாநில அரசு, விலை உயர்வு மது விநியோகத்தை கட்டுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தது.

    75 சதவிகிதம் விலை உயர்ந்துள்ள நிலையிலும், மதுபானக் கடைகளில் கூட்டம் குறைந்ததாக தெரியவில்லை. கால் கடுக்க காத்திருந்து மதுபாட்டில்களை குடிமகன்கள் வாங்கிச்செல்கின்றனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: