15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறியும் ஆன்டிபாடி சோதனை முறை தொடக்கம் - எப்படி செயல்படுகிறது?

15 நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என உறுதி செய்யும் ஆன்டிபாடி சோதனை முறையை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறியும் ஆன்டிபாடி சோதனை முறை தொடக்கம் - எப்படி செயல்படுகிறது?
ஆன்டிபாடி சோதனை முறை தொடங்கியபோது
  • Share this:
தற்போது உள்ள நடைமுறையின் படி PCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.. PCR சோதனை முடிவுகள் தெரிந்துக்கொள்ள 48 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.

பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்.. STRUMED SOLUCTIONS PVT LTD  (ம)  AIGES HOME HEALTHCARE PVT LTD என்ற இரு தனியார் நிறுவனங்களின் முயற்சியால் ஆன்டிபாடி பரிசோதனை முறையில் 15 நிமிடத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவரா? என தெரிந்துக்கொள்ளும் முறையை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்,

சென்னை மாநகராட்சி ஆணையர் வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்ற நிகழ்சியில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது.


எப்படி மேற்கொள்ளப்படுகிறது சோதனை ?

ஏற்கனவே இருந்த ராபிட் பரிசோதனை கிட்டுகளை பயன்படுத்தி ஆன்டிபாடி பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், தொற்றில் இருந்து மீண்டவர்கள், தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் என 3 விதமான முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்

பரிசோதனைக்கு வருபவர்களின் இரத்த மாரிதியை சேகரித்து ஆன்டிபாடி ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். ஒருவருக்கு கொரோனா தாக்கியிருந்தால் உடனடியாக நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றம் உண்டாகும் அதன் படி நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒருவருக்கு கொரோனா தாக்கியிருந்தால் 3 நாட்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் IgM என்னும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.சோதனை முடிவில் IgM என வரும் பட்சத்தில் கொரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக PCR சோதனை மேற்கொண்டு முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

முதல் சோதனையில் IgM என முடிவு வந்து தொற்று உறுதி செய்யபட்டவர்களின் உடலில் 7 நாட்களில்  நோய் எதிர்ப்பு மண்டலத்தில் IgG  என்ற மாற்றம் ஏற்பட்டால் குறிபிட்ட நபர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவராக கருதப்படுவார்.
முதல் சோதனையிலேயே IgG  என முடிவு வரும் நபர்களுக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா பாதித்து தானாக குணமடைந்தவர்கள் என கருதப்படுவர்.
படிக்க: ₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி

படிக்க: இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்
அதேபோல் சோதனையில் Control  என முடிவு வரும் நிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறிபிட்ட நபர் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என தெரியவரும். இந்த முடிவுகள் அத்தனையும் 15 நிமிடங்களில் தெரிந்துவிடும்.

அறிகுறியுடனோ (அ) அறிகுறி இல்லாமலோ ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுக்காமல் தானாக தொற்று குணமடைந்திருந்தால் குணமடைந்த பிறகு PCR சோதனை செய்தால் முடிவில் நெக்கட்டிவ் என மட்டுமே தெரியும். ஏற்கனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்திருப்பது தெரியாது.

Also read... மீண்டு வரும் ராயபுரம் - 70 நாட்களுக்குப் பின் குறைந்த தொற்று எண்ணிக்கை

ஆனால் ஆன்டிபாடி சோதனை முறையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என தெரியவரும் என குறிப்பிடும் தனியார் ஆய்வக நிறுவனத்தினர், அடுத்தகட்டமாக பொதுமக்கள் பரவலாக வாழும் பகுதியில் இந்த பரிசோதனை மேற்கொண்டால் சோதனை மேற்கொள்ளும் பகுதியில் நோய் பரவல் மற்றும் தாக்கத்தை கண்டெரிய முடியும் என குறிப்பிடுகின்றனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்து IgG என முடிவு வரும் நபர்களின் மாதிரிகளை இரண்டாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தி அதன் மூலம் பிளாஸ்மா தானம் செய்ய தகுதி உடையவர்களின் பட்டியலை தயார் செய்ய முடியும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

முதற்கட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்படும் நிலையில் இது குறித்து சுகாதாரத்துறையிடம் கலந்தாலோசித்து அடுத்தகட்டமாக பொதுமக்களுக்கு சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த சோதனை பொது மக்களுக்கு மேற்கொள்ளும் பட்சத்தில் 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் நோய் பரவலை வேகமாக கட்டுப்படுத்த முடிவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading