BREAKING | தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று

Corona | தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது

BREAKING | தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 16, 2020, 8:17 PM IST
  • Share this:
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்கனவே உறுதியாகி இருந்தது. இதில், அன்பழகன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது நான்காவது அமைச்சராக நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று இருந்ததை அடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டார். சோதனையின் முடிவில் பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.





படிக்க: ₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி

படிக்க: இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்


இதையடுத்து சென்னையில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடங்கியுள்ளார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading