கொரோனா வாரியர்ஸ் : முன்கள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிவிப்பு

கொரோனா வாரியர்ஸ் : முன்கள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிவிப்பு

முன்களப் பணியாளர்கள்

கொரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளர்களாக செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளர்களாக செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா வாரியர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள்.

    கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த செயல் வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

    ‘பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு’ எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு பாதுகாப்பாகவும் அமைகின்றது.

    2020 மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இதில் 3ஆவது முறை நீட்டிக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், 24 ஆம் தேதிக்குப் பின்னர் புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்காக நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதில் இந்த திட்டம் முக்கியமான உளவியல் பங்கைக் கொண்டுள்ளது” என்று சகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Must Read :  வேலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு.. ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு

    அத்துடன், கொரோனா வாரியர்ஸின் இந்த காப்பீட்டு திட்டம் வருகிற 24ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக்கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அதனைத் தொடர்ந்து ஒரு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: