• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா சிகிச்சைக்கு விடுதிகளை வழங்க அண்ணா பல்கலை. ஒப்புதல்: மாணவர்களை காலி செய்ய அறிவுறுத்தல்

கொரோனா சிகிச்சைக்கு விடுதிகளை வழங்க அண்ணா பல்கலை. ஒப்புதல்: மாணவர்களை காலி செய்ய அறிவுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா சிகிச்சைக்கு விடுதிகள் வழங்கப்படவுள்ளநிலையில், பல்கலைக்கழக விடுதிகளைக் காலி செய்யவேண்டும் என்று மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. 

  • Share this:
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை  ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. விடுதிகளில் மாணவர்களின் உடைமைகள் உள்ளதால் விடுதிகளை ஒப்படைக்க இயலாது. வகுப்பறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  மாநகராட்சி அதிகாரிகள் அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவைச் சந்தித்து பேசியதையடுத்து விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் மாணவர்கள் தங்கள் விடுதிகளை காலி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளை காலி செய்யும் விதமாக வெளியூரில் தங்கி உள்ள மாணவர்கள் சென்னை வந்து விடுதிகளை காலிசெய்து கொண்டு தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி செய்ய வேண்டுமென்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்  கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: