• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக ரோஜா உட்பட 5 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்!

கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக ரோஜா உட்பட 5 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்!

வீடியோ காட்சிகள். (கோப்புப் படம்)

வீடியோ காட்சிகள். (கோப்புப் படம்)

5 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஜா உட்பட ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கு  உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஸ்ரீகாளஹஸ்தி, நகிரி, சூலூர்பேட்டை, பலமனேர், சிலக்கலூர்பேட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மதுசூதன் ரெட்டி, ரோஜா, சஞ்சீவியா, வெங்கடகவுடா மற்றும் ரஜனி ஆகியோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பொது மக்களை கூட்டி நிவாரண உதவிகளை வழங்கியதாக வழக்கறிஞர் கிஷோர் பொது நல வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

    காணொளி காட்சி மூலம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் இந்திரனில் பாபு வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த மாதம் 21-ம் தேதி நடிகை ரோஜா, தனது தொகுதியான நகரிக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார்.

    தொகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டரை அவர் திறந்து வைக்கச் சென்றார். அப்போது, கிராம மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாலையின் இருபக்கமும் நின்று, அவர் வரும் பாதையில் பூக்களைத் தூவினர். ரோஜாவும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நடந்து வந்தார்.



    இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், ஊரடங்கை மீறியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதேபோல, மற்ற எம்.எல்.ஏ.க்களும் ஊரடங்கு விதிகளை மீறி நிவாரண பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    mbed/YxA93923Drk" width="100%" height="360">

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: