பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 57 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.. முதல்வர் முடிவுக்கு கடும் விமர்சனம்

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 57 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.. முதல்வர் முடிவுக்கு கடும் விமர்சனம்

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்- கோப்புப் படம்

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பள்ளிகளை திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - தமிழக அரசு தீவிர ஆலோசனை

  கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகமே முடங்கிப்போயிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக படிப்படியாக தளர்வுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் சமூக இடைவெளி என்பது சாத்தியம் இல்லாதது என பெற்றோர்கள் கருதுகின்றனர்.

  வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்..

  மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் இல்லாத நிலையில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி இன்றி கல்வி கற்பது இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தற்போது பள்ளிகளை திறப்பதை காட்டிலும் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

  US election Results 2020: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கடந்துவந்த பாதை..

  இந்த சூழலில், வரும் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் உள்ளது.  பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: