திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வினியோகம் இன்று முதல் நிறுத்தம்

கோப்புப் படம்

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.

  • Share this:
    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் வினியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச டோக்கன் வினியோகத்தை தேவஸ்தான நிர்வாகம் நேற்று இரவு முதல் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கும், திருப்பதி, திருமலையில் வசிக்கும் பொது மக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இலவச டோக்கன்களை தேவஸ்தான நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

    இம்மாதம் 14ஆம் தேதி முதல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகியவை உள்ளிட்ட கட்டண சேவைகள் மீண்டும் துவங்கும் என்று ஏற்கனவே அறிவித்த தேவஸ்தான நிர்வாகம், தற்போதைய நிலையில் கட்டண சேவைகளை மீண்டும் துவக்க இயலாது என்று தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் திருப்பதியில் நேற்று முன்தினம் 39,055 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.1.75 கோடி உண்டியல் வசூலானது. நேற்று 49,754 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதில் ரூ.1.91 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து அனைவரும் குணமடைய வேண்டி திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் 12-வது கட்டமாக சுந்தரகாண்ட பாராயணம் படிக்கப்பட்டது. இதில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மேலும் படிக்க... அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: சிகிச்சை அளிக்க சென்னையில் மீண்டும் 3 அடுக்கு படுக்கைகள்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: