சமூக இடைவெளியுடன் இருக்கைகள்... ஆந்திராவில் பேருந்துகளில் மாற்றம்...!

(Image: FB/APSRTC.Buses)

”சகஜமான நிலை வந்த பிறகு இருக்கைகள் பழைய முறையைப்போல இருக்கைகளை மாற்றவும் முடியும்”

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் கொண்ட பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் முக்கிய தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை பின்பற்ற, ஆந்திர போக்குவரத்துக் கழகம் வழக்கமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக  மாற்றப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஒரு நபருக்கும் இன்னொருவருக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பயணிக்கக்கூடிய தொலைதூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  விரைவில் போக்குவரத்து துவங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், சகஜமான நிலை வந்த பிறகு இருக்கைகள் பழைய முறையைப்போல மாற்றவும் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published: