மருத்துவமனையில் உபகரணம் இல்லை என்று குற்றம் சாட்டியதால் சஸ்பெண்ட் ஆன மருத்துவர்... கைகள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடந்ததால் பரபரப்பு

மருத்துவர்

மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று கடந்த மாதம் மருத்துவர் குற்றம் சாட்டினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனாவை கட்டுபடுத்த தேவையான உபகரணங்கள் நான் வேலை செய்யும் மருத்துவமனையின் இல்லை என்று குற்றம் சாட்டிய காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு மருத்துவர், கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தவர் டாக்டர் சுதாகர். தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று கடந்த மாதம் அவர் குற்றம் சாட்டினார்.

  இதற்காக அவரை கடந்த மாதம் எட்டாம் தேதி ஆந்திர மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்று தெரியாத நிலையில், டாக்டர் சுதாகர் இன்று மாலை நரசிபட்டினம் அருகே சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் லாரி ஒன்றின் முன் கிடந்தார்.

  சாலையில் கிடந்த மருத்துவர்


  அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு நரசிபட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர். பணியிடை நீக்கத்திற்கு பின் டாக்டர் சுதாகர் மாயமான நிலையில் அவரை போலீசார் கைகளை பின்புறமாக கட்டி அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: