கொரோனா எதிரொலி; ஆந்திராவில் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 அறிவிப்பு!

”மார்ச் 31ஆம் தேதிவரை ஏழைகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க ஜெகன்மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார்”

கொரோனா எதிரொலி; ஆந்திராவில் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 அறிவிப்பு!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
  • Share this:
ஆந்திராவில் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதை அடுத்து ஏழை குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவை வரும் 31-ம் தேதிவரை முடக்கி சீல்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச அரசின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 31-ம் தேதி வரை மாநிலத்தை மூடி சீல்வைக்க உள்ளதாக அறிவித்தார்.

அடுத்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள், வரும் 29-ம் தேதியே வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். இதேபோல, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று ஜெகன்மோகன் தெரிவித்தார்.


இதேபோல, ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 12 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் 1, 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading