ஆந்திராவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்... 842 ஆசிரியர்கள், 630 மாணவர்களுக்கு கொரோனா

கோப்புப்படம்

கொரோனா அச்சம் காரணமாக அரசு பள்ளியில் 60 விழுக்காடு மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 50 விழுக்காடு மாணவர்களும் மட்டுமே வருகின்றனர்.

 • Share this:
  ஆந்திராவில் கடந்த 2 ஆம் தேதி,9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டநிலையில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், 630 மாணவர்கள் 842 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 2ம் தேதி திங்கள்கிழமை ஆந்திராவில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இந்நிலையில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளியைச் சேர்ந்த 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரின் சோதனை முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 630 மாணவர்கள் 842 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக அரசு பள்ளியில் 60 விழுக்காடு மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 50 விழுக்காடு மாணவர்களும் மட்டுமே வருகின்றனர். எனினும் பள்ளிகளைத் திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியின்றி கல்வி கற்பது இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
  Published by:Rizwan
  First published: