கொரோனா பாதித்த தந்தைக்காக இருந்த வேலையை கைவிட்டு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக சேர்த்த MBA பட்டதாரி!

வேலையை கைவிட்ட தெலங்கானா பட்டதாரி

ஆதரவில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தையை கவனித்துக்கொள்ள இந்த முடிவை எடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக தனது தந்தை இழந்துவிட்டதாக வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை கவனித்துக் கொள்ள, வேலையை கைவிட்ட தெலங்கானா பட்டதாரி ஒருவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆதரவில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தையை கவனித்துக்கொள்ள இந்த முடிவை எடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக தனது தந்தை இழந்துவிட்டதாக வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் விசாகாவில் உள்ள அக்கையபாலத்தைச் சேர்ந்த மதுகிஷன் ராவ் என்பவர் MBA பட்டம் பெற்றவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசாங்கத்தால் நடத்தப்படும் கால் சென்டரில் இவர் பணிபுரிந்து வந்தார். மதுகிஷன் ராவின் தந்தை பெயர் சுதர்சன் ராவ் இவருக்கு வயது 67 இருக்கும். இவர் உள்ளூர் ஷிப்யார்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார்.

சமீபத்தில் தந்தை சுதர்சன் கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதை தொடர்ந்து, அவரை கடந்த மே 2ம் தேதி அன்று நகரத்தில் உள்ள அரசால் நடத்தப்படும் கேஜிஹெச் மருத்துவமனைக்கு மகன் மதுகிஷன் மாற்றியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிஎஸ்ஆர் பிளாக்கின் நான்காவது மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ALSO READ : தள்ளுவண்டியில் முட்டை திருடிய தலைமை காவலர்..வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட்

இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, தந்தை சுதர்சன் குளியலறையில் கீழே விழுந்ததால் உடம்பில் காயம் பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை புறக்கணித்ததாக தந்தை சுதர்சன் தனது மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மதுகிஷன் மருத்துவமனையில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஊழியர்கள் சுதர்சனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது நிலைமை முன்னேறவில்லை என்றும் கூறப்பட்டது.

ALSO READ : தந்தைக்காக ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட பெண்ணை உடலுறவுக்கு அழைத்த நபர் - நெட்டிசன்கள் ஆவேசம்!

தந்தையைப் பாதுகாக்க வேறு வழியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மதுகிஷன் தனது தந்தையை கவனித்துக் கொள்ளும் பொருட்டு கால் சென்டரில் இருந்த வேலையை விட்டுவிட்டு மருத்துவமனையில் துப்புரவாளராக வேலை செய்ய முடிவு செய்தார். மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்ததும், தந்தை அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் மதுகிஷனால் தனது தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தையை மருத்துவமனை அறை முழுவதும் தேடி பார்த்த பிறகும் கிடைக்கவில்லை.

இறுதியாக தனது தந்தையின் உயிரற்ற உடல் மருத்துவமனையில் உள்ள ஒரு கழிப்பறைக்கு அருகிலுள்ள வராண்டாவில் கவனிக்காமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகிலுள்ள வார்டில் இருந்த மற்றொரு நபர், சுதர்சன் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக மதுகிஷனுக்கு தகவல் கொடுத்துள்ளார். தந்தைக்காக இருந்த வேலையை விட்டு அவரை கவனித்துக்கொள்ள இவ்வளவு முயற்சிகள் எடுத்த போதிலும், மதுகிஷனால் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாதது பெரும் வேதனையை அளித்துள்ளது.

ALSO READ : கொரோனாவுக்கு எதிரான போரில் உதவிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானி.. இங்கிலாந்து பிரதமர் விருது வழங்கி பாராட்டு

சுதர்ஷனின் மரணத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம் காட்டியதே காரணம் என மதுகிஷனும் அவரது குடும்பத்தினரும் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனர், மருத்துவமனைத் தலைவர் மற்றும் மருத்துவமனை மேற்பார்வையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கொடுத்த புகாரின்படி, திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் சுதர்சன் குளியலறையில் கீழே விழுந்துள்ளார்.

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக சுதர்சனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கத் தவறியதால் அவர் அங்கு உயிரிழந்துள்ளார். துயரமடைந்த மகன் இப்போது மாவட்ட அதிகாரிகள் தனது குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்றும் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: