Home /News /coronavirus-latest-news /

Orphaned Children | கொரோனாவுக்கு பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்: ஆந்திரா முதல்வர் அறிவிப்பு

Orphaned Children | கொரோனாவுக்கு பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்: ஆந்திரா முதல்வர் அறிவிப்பு

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவில் கொரோனாவின் உக்கிரம் தன் கோரமுகத்தைக் காட்டி வருகிறது, மத்திய மாநில அரசுகள் போராடிக் கட்டுப்படுத்த ஒன்று மாற்றி ஒன்று என்று நடவடிக்கைகளை மேற்கொண்டு முயற்சிகள் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிறுவனங்கள், ஸ்தாபனங்கள், தனிமனிதர்கள், வெளிநாடுகள் என்று உதவிகள் குவிந்து வருகின்றன. இதில் பெரும் சோகம் என்னவெனில் தாய் தந்தை இருவரையும் குழந்தைகள் பறிகொடுத்து அனாதைகளாகி வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட்டு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

    இதனையடுத்து மாநில, மத்திய அரசுகளும் கொரோனாவினால் அநாதையான குழந்தைகள் தொடர்பாக திட்டங்களை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் அனாதைகளான குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட் அறிவித்துள்ளார்.

    பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் செலுத்தப்படும் இந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் மாதாந்திர வட்டி மூலம் குழந்தையின் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு குழந்தையை பராமரிக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

    நாட்டில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா 2-வது அலையால் குழந்தைகளின் நிலை பாதுகாப்பற்ற சூழலுக்குச் சென்றுள்ளது, அதிகமான பாதிப்பை குழந்தைகள்தான் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    இதனால், ஆந்திர மாநில அரசு குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். இந்த தொகையின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும்.

    ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தையை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் இந்த வைப்புத் தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் ஆந்திராவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Andhra cm, Andhra pradesh cm, Corona, JaganMohan Reddy

    அடுத்த செய்தி