ஊரடங்கு நடைமுறை நிறைவளிக்கிறது... மக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு தேவை - அன்புமணி!

ஊரடங்கு நடைமுறை நிறைவளிக்கிறது... மக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு தேவை - அன்புமணி!
அன்புமணி ராமதாஸ்
  • Share this:
144 தடை உத்தரவை நிறைவேற்ற அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனநிறைவு அளிப்பதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பாராடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களில் ஒரு தரப்பினர் 144 தடை உத்தரவை விளையாட்டாகவும், விடுமுறையாகவும் நினைத்துக் கொண்டு சாலைகளில் சுதந்திரமாக வலம் வந்ததாக கவலை தெரிவித்துள்ளார்.

சாலைகளில் தேவையின்றி வலம் வந்தவர்களை அறிவுரை கூறி காவல்துறையினர் கையாண்ட விதம் உன்னதமானது என்றும் அன்புமணி பாராட்டியுள்ளார்.


பெட்ரோல் நிலையங்களை முழுமையான எண்ணிக்கையில் திறக்க அனுமதித்திருப்பது தேவையற்றது என்று கூறியுள்ள அன்புமணி, கிராமப்புறங்களில் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்