பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி வேண்டுகோள்!

பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி வேண்டுகோள்!
  • Share this:
வீடுகளுக்கு வெளியே பொதுமக்கள் வராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்புப் பணிகளில் பல ஓட்டைகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடு, வெளிமாநிலத்திற்கு செல்லாத, அப்படி சென்றவர்களுடன் தொடர்பில் இல்லாத 3 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக கூறியுள்ள அன்புமணி, கொரோனா பரவலின் மூன்றாம் நிலைக்கு தமிழகம் சென்று விட்டதோ என ஐயம் தெரிவித்துள்ளார்.

சமூகப் பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு ஆணையை முழுமையாக கடைபிடிப்பதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் எச்சரித்துள்ளார். மளிகை மற்றும் காய்கறிகளை ஆர்டர் செய்தால், தொண்டு நிறுவனங்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு செல்லும் முறையை தமிழகம் முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.


அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading