அம்மா கோவிட் 19 திட்டத்தில் தரப்படுவது என்னென்ன...?

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மா கோவிட் 19 திட்டத்தில் எவையெல்லாம் தரப்படும் என்பதை பார்க்கலாம்..

  • Share this:
14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான தொகுப்பாக வழங்கப்படும் அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு சேவை பெட்டகத்தின் விலை 2500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, உடல் வெப்பத்தை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் தெர்மோமீட்டர் கருவியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தினமும் ஒன்றை பயன்படுத்தும் விதமாக 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுர குடிநீர் பவுடர் பாக்கெட்களும் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.60 அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 வைட்டமின் சி மாத்திரைகள், 14 ஸிங்க்(Zinc) மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகளுடன் கொரோனா குறித்த கையேடும் அந்த பெட்டகத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading