கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் அவரது மகன் அபிதாப் பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 • Share this:
  பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக, அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

  நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த ஜூலை 11ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்திக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

  இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக, அவரது மகன் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனது தந்தை குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அபிஷேக் பச்சன், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published: